கசம், ஆஸ்துமா, சளி , இருமல் குணமாக்கும் ஆடாதோடை


ஆடாதோடையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உண்டா என பிரமிக்க தக்க வகையில் அதன் மருத்துவ குணங்கள் அதிகம். அந்தவகையில் அதன் மருந்துகுணங்கள் பற்றி பார்ப்போம்.


கசம் குணமாக 

 • ஆடாதோடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட கசம் குணமாகும்.

வயிற்று பொருமல் குணமாக

 • ஆடாதொடை இலையுடன் இலைக்கள்ளி சாற்றை கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தல் இரைப்பிருமல் , வயிறு உப்புசம்,வயிற்று பொறுமல் , கப நோய்கள் குணமடையும்.

ஆஸ்துமா குணமாக 

 • கண்டங்கத்தரி வேர் , ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டர் ஆக்கி 100மி.லி வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல்(ஆஸ்துமா) குணமாகும்.

ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட

 • ஆடாதொடை இலை,வேர் வகைக்கு அரை கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

இருமல் குறைய 

 • ஆடாதொடை வேர் , கண்டங்கத்தரி வேர் இவற்றை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

 • துளசி,ஆடாதொடை,வெற்றிலை, சுக்கு,மிளகு, திப்பிலி, சுக்கரா இவற்றை அரைத்து அடுப்பில் வைத்து கிண்டி ஆறிய பின் தேன் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குணமடையும்.

 • ஆடாதொடை 2,3 இலைகளை பொடி பொடியாக்கி தேன் சேர்த்து மண் சட்டியில் இட்டு எரித்து அதிமதுரம் 2கிராம்,திப்பிலி 1 கிராம் , தாளிசப்பத்திரி 1/2 கிராம் , சிற்றரத்தை 1/2கிராம் நசுக்கி சேர்த்து 1/2 படி நீர் விட்டு நான்கில் ஒன்ராய் வற்ற வைத்து காலை,மாலை இருவேளை கொடுக்க இருமல் தீரும்.

 • ஆடாதொடை 2,3 இலைகளை குறுக வரிந்து அத்துடன் ஏலக்காய் 1 சேர்த்து 2 ஆழாக்கு வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 30 மில்லி முதல் 60 மில்லி வரை வீதம் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடிக்க இருமல் குறையும்.

 • ஆடாதொடை இலை இரசத்தை 10 முதல் 20 துளி வரை தேனுடன் கலந்து கொடுக்க இருமல் குணமாகும்.

 • துளசி இலை சாறு,ஆடாதொடை இலை சாறு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.

 • ஓமத்தில் ஆடாதொடை சாறு,இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு,புதினா சாறு சேர்த்து வெயிலில் காய வைத்து இடித்து பொடி செய்து கொடுத்தால் இருமல் குணமாகும்.

 • ஆடாதொடை பட்டையை பொடித்து தேனில் கலந்து குடித்தால் இருமல் குறையும்.

சளி தொல்லை நீங்க

 • ஆடாதொடை இலை கஷாயம் தேன் கலந்து குடிக்க சளி காய்ச்சல் குணமாகும்.

 • ஆடாதொடை இலைகளை பொடியாக்கி நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்று போட்டால் சளி குறையும்.

 • ஆடாதொடை இலை,வெற்றிலை,துளசி,தூதுவளை எடுத்து லேசாக அரைத்து பின் வேக வைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லை குணமாகும்.

 • ஆடாதொடை இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து நீர் ஊற்றி நன்றாக காய்ச்சி சிறிது சக்கரை சேர்த்து அருந்தி வந்தால் மார்பு சளி குறையும்.

வயிற்று வலி குறைய

 • ஆடாதொடை இலையையும் சங்கிலையையும் எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

Post a Comment

0 Comments