எலுமிச்சம் பழத்தின் அதிசய மருத்துவ குணங்கள்


எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

எலுமிச்சம் சாற்றுடன் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட சூட்டு இருமல் தணியும், நற்சீரகத்தை அரைத்து எலுமிச்சம் சாற்றுடன் கலந்து காலை,மாலை சாப்பிட இருமல் குறையும்.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் துண்டை தேய்த்தால் விஷம் இறங்கும்.

தலைவலிக்கு தேநீரில் எலுமிச்சம் சாறு கலந்து குடிக்க வலி தீரும்.

தொடர்ச்சியான வயிற்றுப் போக்குக்கு வெங்காயச் சாறும், எலுமிச்சம் சாறும் கலந்து சாப்பிட்டு வர கட்டுப்படும்.

எலுமிச்சம் சாற்றில் சிறிது உப்பு போட்டு வெந்நீரில் கலந்து குடித்தால் வாய்த் துர்நாற்றம் தீரும்.

வியர்வை துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் எலுமிச்சம் சாற்றையும், சிறிது உப்பும் சேர்த்துக் குளிக்கவும்.

காய்கறிகள் வாடிபோனால் எலுமிச்சம் சாறு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவிட படுமையாகும்.

எலுமிச்சம் சாறும், உப்பும் கலந்து பல் துலக்க பல் பளபளப்பாகி விடும்.

வயிற்றோட்டம், வாந்தி போன்றவற்றிற்கு இதன் சாறும்,சிறிது உப்பும் கலந்து குடிக்க குணமாகும்.

Post a Comment

0 Comments