தினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் கட்டுப்படும்


கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், விட்டமின் A, C, K போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நம் உடலில் சேரும்.

காரட்டை பச்சையாகச் சாப்பிடும்போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து  உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது.

அதனால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து, உடல் எடையை விரைவில் குறைக்குமே தவிர, உடல் எடை அதிகரிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கேரட் உணவு ஜீரணத்திற்கு காரணமாகும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் கேரட்டில் உள்ளது. மாலைக் கண் நோயை தடுக்கும்.


இதய நோய் வராது 

கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாக சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால்தான் அதன் முழு சத்துக்களை பெற முடியும். பச்சையாக சாப்பிடும்போது இதய நோய்களை தடுக்க முடியும்

ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பல் பராமரிப்பு

பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும்  தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில்  இருந்து விடுபடலாம்.


கண் பார்வை 

ஆரோக்கியமான கண்களை பெற கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப்  போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும்


வேகவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

கேரட்டை நறுக்கி, சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கிறது. அதாவது அதன் கடினமான செல் சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோடின் சமைக்கும்போது வெளிப்படுகிறது. காரட்டுடன் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து எடுத்துக் கொண்டால் பீட்டா கரோடின் சத்தை உடல் நன்றாக உறிஞ்சி உள்ளே எடுத்துச் செல்லும்.

Post a Comment

0 Comments