முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


ஒரு சில மரங்களின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கும். அந்த வகையில் இன்று முருங்கை மரத்தின் பாகங்களில் ஒன்றான முருங்கைப் பூவில் நிறைந்துள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி பார்ப்போம். மேலும் முருங்கைப் பூவை எப்படி எல்லாம் சாப்பிட்டால், அதனுடைய பலனைப் பெறலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

முருங்கைப் பூவின் மருத்துவக் குணங்கள்

தினமும் முருங்கைப் பூக்களைப் பாலில் போட்டு நன்கு காய்ச்சி இரு வேளை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

அதேபோல் முருங்கைப் பூவுடன் கற்றாலைச்சாறு, வெண்ணெய் ஆகிய பொருட்களை சம அளவு எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை சாப்பிட்டு வந்தால், மேகநோய் எனும் பெண் சீக்கு விரைவில் குணமாகும்.

மேலும் முருங்கைப்பூமற்றும் பிரண்டை, சிறிதளவு தேங்காய் ஆகியவற்றை சேர்த்து புட்டு போல் அவித்து, அதை பிழிந்து சாப்பிட்டால், கடுமையான வயிற்று வலி விரைவாக குணமாகும்.

முருங்கைப்பூவை எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள அதிகப்படியான உடல் வெப்பத்தைக் குறைந்து குளிர்ச்சி தன்மையை அதிகரிக்கலாம்.

முருங்கைப்பூவை நன்றாக அரைத்து, பசுவின் பால் மற்றும் தேங்காய் பால் கலந்து, அதில் 50 கிராம் வெல்லம் சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் இறக்கி, தினமும் இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் கோளாறு மற்றும் உதிரப்போக்கு பிரச்சனை குணமாகும்.

முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி தினமும் இரு வேளையும் அருந்தி வந்தால் கண்களில் உள்ள ஈரத்தன்மை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கி விரைவாக குணமாகும்.

மேலும் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் கண்களில் உள்ள வெள்ளெழுத்து குணமாகும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் விரைவாக மறைந்து விடும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சத்து முருங்கைப் பூவிற்கு அதிகமாக உள்ளது.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி ஏற்படும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி விரைவாக குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக விடுபடலாம்.

பித்தம் அதிகமாக உள்ளவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு கஷாயம் செய்து தினமும் இரு வேளை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

Post a Comment

0 Comments