உதிரப்போக்கு நிற்கவில்லையா? இதை குடிங்க...


சிலருக்கு உதிரப்போக்கு அதிகமாக இருக்கும், அத்துடன் 3 அல்லது 5 நாட்களுக்கு மேலதிகமாகவும் உதிரப்போக்கு இருக்கும். இவ்வாறு அதிக நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு இருந்தால் உடல் வலுவற்று போய்விடும்.

இப்படி நீண்ட நாள் அதிக உதிரப்போக்கு இருப்பவர்களுக்கு உதிரப்போக்கை குறைப்பதற்கான எளிய பாட்டி வைத்தியத்தை இங்கே பார்க்கலாம்.

வாழைப்பூ 

அதிக நாட்களாக தொடர்ந்து உதிரப்போக்குள்ளவர்களுக்கு வாழைப்பூ ஒரு சிறந்த நிவாரணமாகும்.

சிறிதளவு வாழைப்பூவை எடுத்து அதை நன்றாக அரைத்து (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்)  அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி 3 நாட்கள் செய்து குடித்து வர அதிக உதிரப்போக்கு நிக்கும்.

ஆவாரம் பட்டை 

ஆவாரம் பூ பட்டையை சிறிதளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கசாயம் செய்து குடித்தால் அதிக நாள் உதிரப்போக்கு நிக்கும்.

Post a Comment

0 Comments