பெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்


பொதுவாக இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் சருமத்தில் அதிகம் அழுக்கு சேர்வதன் மூலம் முகத்தில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவது .

இந்த பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம் என்றால் இளம் வயதிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி, பின்பு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முகத்தின் அழகு கெடுத்துவிடும். எனவே இந்த பிரச்சனையை குணப்படுத்த பீட்ரூட் நமக்கு அதிகமாக உதவுகிறது.

சரி இப்போது பீட்ருட் அழகு குறிப்புகள் (beetroot face pack) சிலவற்றை நாம் காண்போம் வாங்க..!


 • தினமும் பீட்ரூட் ஜீஸ் குடித்து வந்தால் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

 • முகப்பரு மற்றும் கட்டிகள் வராது.

 • இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.

 • பீட்ரூட் சாற்றினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவு பெரும்.

 • ஒரு பீட்ரூட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜீஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.

 • பீட்ரூட்டை தோள் சீவி, துருவி, விழுதாக அரைத்துகைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வர கைகள் மெண்மையாகும்.

 • பீட்ரூட்டை தோள் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள், இதில் சிறிது பார்லி பவுடர் மற்றும் லெமென் ஜீஸ் சிறிது சேர்த்து கலந்து இந்த பேஸ்டை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

பீட்ரூட் ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை (Beetroot Face Pack)

தேவையான பொருட்கள்:

 1. பீட்ரூட் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
 2. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
 3. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 4. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
 • முதலில் கடலை மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

 • பின்பு அவற்றில் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் பீட்ருட் சாறு (beetroot juice benefits for skin in tamil) ஆகியவற்றை பேஸ்டு பதம் வரும் வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:
 • இதை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

 • பின்பு பிரஷ்ஷின் உதவியுடன் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

 • எப்போதும் முகத்தில் அப்ளை செய்யும் போது கீழ் இருந்து மேலாக அப்ளை செய்ய வேண்டும்.


குறிப்பு 1

பொதுவாக முகத்திற்கு மட்டும் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) அப்ளை செய்ய கூடாது, முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கும் சேர்த்து அப்ளை செய்ய வேண்டும்.

முகத்திற்கு மட்டும் நாம் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) அப்ளை செய்தோம் என்றால், முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாகவும் இருக்கும். ஃபேஸ் பேக் அப்ளை செய்யும் போது கழுத்து பகுதியை சேர்த்து அப்ளை செய்ய வேண்டும்.


குறிப்பு 2

இதை பயன்படுத்தியதும் நம் முகத்திற்கு குளிர்ச்சி தன்மையை தரும். அதனுடன் முகத்தில் இருக்கும் அழுக்கு அனைத்தும் நீங்கிவிடும். இதற்கு என்ன காரணம்?

என்னவென்றால் பீட்ரூட்டில் இருக்கும் ஃபாலிக் அமிலம் மற்றும் விட்டமின்கள் தான்.

இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை அதிகளவு கொடுக்கிறது மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது. எனவே இதனை வாரம் இரு முறை என்று இரண்டு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.


குறிப்பு 3

எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு பரு மற்றும் கரும்புள்ளிகள்   தொல்லை அதிகம் வரும். அவர்களுக்கான பீட்ரூட் அழகு குறிப்புகள் அதாவது பீட்ரூட் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) மிகச் சிறந்த தீர்வாக விளங்குகிறது. எனவே தினமும் பீட்ருட் ஃபேஸ் பேக் முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் முகம் பொலிவுடன் காணப்படும்.

ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) போடுவது மட்டுமின்றி தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கு வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து ஒன்றாக அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.


குறிப்பு 4

இதை முகத்தில் அப்ளை செய்வதனால் முகத்தில் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகத்தில் இரத்த ஓட்டத்தை சீர் செய்து, முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்கிறது.

கடைகளில் கிடைக்கும் சில ஃபேஸ் கீரிமை வாங்கி நாம் முகத்தில் அப்ளை செய்வோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்கள் நம் முகத்தின் அழகை பாதித்துவிடும். எனவே இயற்கையான முறையில் தயார் செய்த பீட்ரூட் ஃபேஸ் பேக்கை (beetroot face pack tamil) பயன்படுத்தவும்.

Post a Comment

0 Comments