உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனைக்கு கொய்யா இலை - Pattivaithiyam


தினந்தோறும் கண்ணாடி முன் நின்று தலைமுடியை கவனமாக ஆராயும் பலரில், நீங்களும் ஒருவராக  இருக்கலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள்.

பலரும் முடி உதிர்தல் பிரச்னையை சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்.

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர கொய்யா இலையில்  உள்ள வைட்டமின் சி உதவுகிறது.

கொய்யா இலையின் சாறை தலைமுடியில் தடவுவதால், அது சூரிய கதிர்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கொய்யா இலையின் சாறு உடைந்த முடிகளை சரி செய்து வலிமையாக்குகிறது.

கொய்யா இலையின் சாறை தலையில் தடவி மசாச் செய்து வந்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வதை தடுத்து புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டும்.

இப்பொழுது கொய்யா இலையை பயன்படுத்தி புதிய முடியை வளர செய்வதற்க்கான எளிய வழிமுறையினை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
  • கொய்யா இலைகள் - 1 கைப்பிடி அளவு
  • தண்ணீர் - 1 லீட்டர்

செய்முறை :
  • ஒரு பாத்திரத்தில் 1 லீட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் கொய்யா இலைகளை போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை :
  • முதலில் தலைமுடியை ஷாம்போ கொண்டு நன்றாக அலச வேண்டும். பின் தலைமுடி காய்ந்ததும், இந்த கொய்யா இலை தண்ணீரை தலைமுடியில் தடவி, தலையை பத்து நிமிடங்கள் நன்றாக மசாச் செய்ய வேண்டும்.

  • மசாச் செய்யும் போது முடியின் வேர்க்கால்களில் அதிகம் செய்து 2 மணிநேரம் அப்படியே தலையில் விட்டு பின் மிதமான சூடுள்ள நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

  • உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால், இம்முறையை ஒரு வாரத்தில் 3 முறைகள் பயன்படுத்த வேண்டும்.

  • முடி வளர்ச்சி நன்றாக உள்ளவர்கள் என்றால், வாரத்தில் 2 முறைகள் பயன்படுத்தலாம்.Post a Comment

0 Comments