பயனுள்ள வீட்டு பராமரிப்பு குறிப்புகள் - Pattivaithiyam 1. ஈக்களுக்கு புதினா வாசம் என்றாலே அலேர்ஜிக். எனவே வீட்டில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும் இடத்தில் புதினா இலைகளைக் கசக்கிப் போடுங்கள். ஈக்கள் வேறு வீடு தேடிப் போய்விடும்.

 2. ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் ¼ ஸ்பூன் கடுகு போட்டு பிரிட்ஜில் வைத்தால் பிரிட்ஜில் எந்த வாசனையும் வராது.

 3. புது ஷூக்கள் கடிக்காமல் இருக்க ஷூக்களை சிறிது சோப்பு நீரில் ஊற வைத்து பின் விசிறியின் கீழ் காய வைத்து பின்பு அணியலாம்.

 4. துணிகளின் மீது எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே அந்த இடத்தில் விபூதியை பூசி வைக்கவும். மறுநாள் சோப்பு போட்டு துவைத்தால் எண்ணெய்க் கறை போய்விடும்.

 5. உப்பு ஜாடியில் ஈரம் கசிந்தால் அதில் 2, 3 பச்சை மிளகாயை போடலாம்.

 6. வெள்ளை பெட்சீட், டவல்களில் கறை பட்டுவிட்டால் சிறிது எலுமிச்சை ரசத்தில் சிறிது நீர் கலந்து கொதிக்கவிட்டு பிறகு துவைத்தால் துணியில் பட்ட கறை போய்விடும்.

 7.  வீட்டிற்கு புளி வாங்கும்போது குறைந்த அளவு வாங்குவதே நல்லது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிகம் வாங்கி வைத்தால் புளியில் நிறைய பூச்சிகள் வந்து சேர்ந்து விடும். புளியில் பூச்சிகள் ஒட்டிக்கொண்டாலும் தெரியாது. அப்படி அதிகம் வாங்கி வைத்திருந்தால் அதில் சிறிது உப்பும், வெல்லமும் கலந்த தண்ணீரைத் தெளித்தால் பூச்சிகள் வராது.

 8. துணியில் கறை பட்டுவிட்டால் அரிசி கழுவும் தண்ணீரில் கறைப்பட்ட துணிகளைப் போட்டால் கறைகள் சீக்கிரம் மறையும்.

 9. தங்க நகைகள் அழுக்காக இருந்தால் பூசணிக்காய் ரசத்தால் தேய்த்தால் நகைகள் பளபளப்பாக இருக்கும்.

 10. வீணையில் இருக்கும் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருக்க வீணை மீட்டும்போது அதன் கம்பிகளில் வேசலின் வைத்து துடைத்தால் கம்பிகளில் துருப்பிடிக்காமல் இருக்கும்.

 11. வீட்டு தரையை துடைக்கும்போது தண்ணீருடன் சிறிது வாசனை திரவம் போட்டு துடைத்தால் வீடு கமகமவென்று இருக்கும்.

 12. கால் கொலுசு கருப்பாகி விட்டால் சிறிது சமையல் சோடா போட்டு கழுவிவர பளிச்சென்று இருக்கும்.

 13. சாக்பீஸை பவுடர் செய்து, எலுமிச்சை தண்ணீருடன் கலந்து பித்தளை பாத்திரத்தை துலக்கினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

 14. மாம்பழம் சாப்பிட்டதும் வாய் புளித்தால் சிறிது வெல்லம் அல்லது சக்கரை சாப்பிட்டால் பல் கூசாமல் இருக்கும்.

 15. கைகளில் இங்க் கறை பட்டுவிட்டால் சிறிது பற்பசை போட்டு தேய்த்து கை கழுவினால் கறை மறைந்து கை பளிச்சென்று மாறிவிடும்.

 16. வீட்டில் அதிகமான ஈக்களின் தொல்லை இருந்தால் அவற்றினால் கேன்சர் நோய் வரும் என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி கூறியுள்ளார். ஹெலிக்கோ பேக்டர் பைரோலி என்னும் பக்ரீரியாக்களை ஈக்கள் தங்களுடன் கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்களுக்கு அல்சர் நோயைக் கொடுக்கிறது. அல்சர் சில நேரங்களில் கேன்சராகவும் மாறவாய்ப்புள்ளது.

 17. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் பளபளப்பாக இருக்க கிளப் சோடாவும் ஸ்பான்ச் வைத்து துடைத்தால் பளபளப்பாக இருக்கும். 

 18. கார்பெட்மேல் கறை ஏற்பட்டுவிட்டால் உருளைக்கிழங்கை தேய்த்து பிறகு துணி வைத்து துடைத்தால் கறை மறைந்து விடும்.

 19. சமையல் செய்யும் போது கடாயில் சிறிது உப்பு போட்டு நியூஸ் பேப்பரில் வைத்து பொரித்து வைத்தால் குறைந்தது நான்கு நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

 20. டீ வடிகட்டியில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை சிறிது நேரம் நெருப்பில் காண்பித்து எடுத்தால் அடைப்பு சரியாகிவிடும்.

 21. தூங்கும் போது இருமலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிறிது உப்புக் கல் எடுத்து வாயில் அடக்கி வைத்தால் இருமலால் ஏற்படும் மூச்சுத்திணறல் சரியாகும்.

 22. தங்க நகைகள் வைக்கும் பெட்டியில் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகளின் பளபளப்பு குறையாது.

 23. மெழுகுவர்த்தி உபயோகிக்கும் ஸ்டேண்டில் ஒரு துளி தண்ணீர் விட்டு மெழுகுவர்த்தியை கொளுத்தினால் உருகிவரும் மெழுகை சுத்தம் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

 24. எறும்புகள் அதிகமாக உள்ள இடத்தில் சிறிது மஞ்சள் பொடியை தூவினால் எறும்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 25.  தினசரி ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் நெற்றியில் ஏற்படும் கறைகளைப் போக்க அந்த இடத்தில் துளசிஇலை ரசத்தைக் கொண்டு தேய்த்தால் கறைகள் மறைந்துவிடும்.

 26. குளிர் காலத்தில் பால்பென் சரியாக எழுதவில்லை என்றால் ரீ பில்லை வெளியே எடுத்து சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் வைத்து மறுபடியும் உபயோகிக்கலாம்.

 27. குக்கர் சூடாக இருக்கும் போதே அதனுள் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து விட்டால் குக்கர் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

 28. துணிகளில் கறை ஏற்பட்டால் கறை படிந்த இடத்தில் சிறிது தண்ணீர் தெளித்து லெமன் சால்ட் கொண்டு தேய்த்தால் கறைகள் மறைந்துவிடும்.

 29. சிலர் மணி வைத்த பிளவுஸ், குழந்தைகள் ஆடை என வாங்கியிருப்பார்கள். ஒரு முறை தோய்த்தவுடன் இதிலுள்ள கோல்டு கலர் உரிந்து பார்க்க அசிங்கமாகயிருக்கும். அதற்கு வெளியில் செல்லும்போது அதன் மேல் ACRAN PAPER GLITTERS வாங்கி (tube-ல் இருக்கும்) மணியில் மேல் தடவி சிறிது நேரம் காய வைத்தால் அதே பொன்நிறமாக ஜொலிக்கும். புதுசு போலிருக்கும்.

 30. உப்பும் மஞ்சளும் கலந்து பித்தளை பாத்திரத்தை தேய்த்தால் பாத்திரம் பளபளப்பாக  இருக்கும்.

Post a Comment

0 Comments