மாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க


எந்தக் கவலையும் இல்லாம் ஷாப்பிங் செய்வதும் மற்றும் மிகவும் பிடித்த நண்பர்களுடன் ஒரு காபி சாப்பிடுவதும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் அற்புதமான செயல்களாகும். ஆனால், மாதத்தின் சில நாட்கள் அவள் சோர்வாகவும் மற்றும் தொய்வாகவும் இருப்பதைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்? மாதவிடாய் சுழற்சியை அவள் அனுபவிக்கும் அந்த நாட்களில் தான் அவளுடைய சுறுசுறுப்பு காணாமல் போயிருக்கும்.

இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஆவாரம் பூ பட்டையை கசாயம் செய்து குடித்தால் அதிக நாள் உதிரப்போக்கு நிக்கும்.

போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தால் கூட மாதவிடாய் வலிகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், பெண்கள் அனைவரும் சரிவிகித உணவை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பழுப்பு அரிசியை சாப்பிடுவதன் மூலம் அதில் நிறைந்திருக்கும் பி6 வைட்டமின் பெண்களுக்கு கிடைக்கும், இதன் மூலம் வீக்கங்களைக் குறைத்திட முடியும். மாங்கனீசு சத்து நிரம்பியுள்ள வால்நட்ஸ்கள் மற்றும் பரங்கிக்காய்களை சாப்பிடுவதன் மூலம் தசைபிடிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

பெருஞ்சீரகம்

அரை கப் சோம்புடன் (பெருஞ்சீரகம்) அரை கப் தண்ணீர் சேர்த்து காச்சி வடிகட்டி குடித்துவர மாதவிடாய் வயிற்று வலி குறையும்.

பெருங்காயம்

உலர்ந்த பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு பெருங்காயத்தை போட்டு இதமான நெருப்பில் வருக்கவேண்டும், பெருங்காயம் நிறம் மாறியதும் அதை இறக்கி பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள். கால் டி ஸ்பூன் அளவு பெருங்காய பொடியை மோரில் கலந்து குடித்துவர நிவாரணம் கிடைக்கும்.

பால் 

கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.

இஞ்சி

மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.

வெந்நீர் குளியல்

மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் அதிகளவு வெந்நீர் படும் வகையில் வெந்நீர் குளியல் போடவும். இதன் மூலம் அந்த பகுதியின் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்.

வெந்நீர் ஒத்தடம் 

மாதவிடாய் வயிற்று வலியின்போது அடிவயிறு மிகவும் வலிக்கும், இதற்கு அடி வயித்தில் சிறிது நேரம் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் வயிறு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

ஓமம் 

மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.

கற்றாழை

உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.

கேரட்

கேரட் கண்களுக்கு மிகவும் நல்ல உணவாக இருந்தாலும், மாதவிடாய் வலியை நீக்கவும் உதவுகிறது. கேரட் ஜுஸை ஒரு கிளாஸ் தினமும் குடித்து வந்தால், முறையான இரத்த ஓட்டத்தைப் பெற முடியும் என்று மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்

பப்பாளி

மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.

வேண்டாம் 'ஜங்க் ஃபுட்'

மாதவிடாய் நாட்களில் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளுக்கு சொல்லுங்கள் மிகப்பெரிய 'நோ'. ஜங்க் உணவுகளான பர்கர்கள், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடாமல் நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல், கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.

Post a Comment

0 Comments