பயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள் 1. வீட்டு வேலை செய்வதற்கு முன் கைகளில் ஆலிவ் எண்ணெய்யைத் (olive oil) தடவிய பிறகு வேலை செய்ய ஆரம்பித்தால் கைகள் வேலைக்குப் பிறகு கெட்டியாக இல்லாமல் மிருதுவாக இருக்கும்.

 2. குழந்தைக்கு போடும் ஷூக்கள் வழுக்காமல் இருக்க அதன் கீழ் பாகத்தில் உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் ஷூ வழுக்காமல் இருக்கும்.

 3. சட்டைமேல் உள்ள கறைகள் போக வேண்டுமானால் ஐஸ் கட்டிகளை கறைபட்ட இடத்தில் வைத்து தேய்த்தால் கறைகள் போய்விடும்.

 4. கண்ணாடிகள் மேல் ஸ்டிக்கர் பொட்டின் அழுக்கு பதிந்து இருந்தால் நெயில் பாலிஷ் ரிமூவர் வைத்து அழுத்தித் தேய்த்தால் கண்ணாடி பளிச்சென்றாகிவிடும். 

 5. பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக இருக்க வேண்டுமானால்  தண்ணீருடன் சிறிது மண்ணெண்ணெய் கலந்து பாத்ரூம்  டைல்ஸைத் துடைத்தால் பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக  இருக்கும்.

 6. எந்தவிதமான பழமானாலும் ஜூஸ் போட்டு சாப்பிடும்போதும்  உலோக பாத்திரத்தை உபயோகிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளர்  தான் உபயோகிக்க வேண்டும்.

 7. தாது சத்து மாத்திரை, இரும்பு, கால்சியம் மாத்திரைகளை சாப்பிடும்போது வாயில் போட்டுக் கொண்டு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. பகலில்  தான் சாப்பிட வேண்டும்.

 8. தங்க நகைகள்‌ அழுக்காக இருந்தால்‌ ஷாம்பு கலந்த சுடு தண்ணீரில்‌ நகைகளைத்‌ தேய்த்தால்‌ பளபளப்பாக இருக்கும்‌.

 9. தலை முடிகளில்‌ வைக்கும்‌ பின்களை ஒரு ஸ்பாஞ்சில்குத்தி வைத்தால்‌ அவ்வப்போது தேடாமல்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

 10. டாக்கி டவலை துவைக்கும்போது அந்த நீரில்‌ சிறிது உப்பைப் போட்டு அலசினால்‌ டவல்‌ மிருதுவாக இருக்கும்‌.

 11. கோடைகாலத்தில்‌ உடலிலிருந்து நிறைய வியர்வை வருமாதலால்‌ தளர்வான பருத்தி ஆடையை அணியலாம். அடிக்கடி தண்ணீர்‌ குடிப்பது மிகவும்‌ நல்லது.  நீர் மோரில் சிறிது உப்பு, சீரகம், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை போட்டுக் குடித்தால் உடம்புக்கு நல்லது.

 12. வீட்டில் குப்பை கூளம் அதிகமாக சேர்ந்தால் அதை எடுக்கும் வரை அதன் மேல் பேக்கிங் சோடாமாவு, ஆரஞ்சு பழத்தோல், எலுமிச்சைதோல் போட்டு வைத்து, பிறகு குப்பையை எடுத்ததும் துர்நாற்றம் அடிக்காது.

 13. காய்கறிகள் வைத்துக் கொள்ளும் கூடைகளில் ஸ்பாஞ்சு வைத்துக் கொண்டால் காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

 14. ஊதுபத்தியை கொளுத்துவதற்கு முன் ஈரத்துணியில் 2 நிமிடம் வைத்து, பிறகு கொளுத்தினால் நீண்ட நேரம் எரியும்.

 15. வீட்டுக்கு முன்னால் பூச்செடிகளை வளருங்கள். குறிப்பாக வாசமுள்ள செடிகளை வளர்க்க முயலுங்கள். இதனால் வீட்டின் அழகு கூடும். இருள் மறையும், ஜோதி நிலைக்கும். இந்த மங்களகரமான பூச்செடிகளில் மஹாலட்சுமி வாசம் செய்வதால் வீட்டில் கடன் கஷ்டம் வர வாய்ப்பில்லை.

 16. கண்ணாடி அழுக்கடைந்து விட்டதா, ஒரு துண்டு உருளைக்கிழங்கால் நன்கு தேய்த்து துடைத்துப் பாருங்கள். நன்கு பளபளக்கும்.

 17. சப்தம் செய்யும் கதவுகளில் எண்ணெய் விடுவதைவிட பெட்ரோலியம் ஜெல் தடவினால் நன்கு வேலை செய்யும்.

 18. தேநீர் குவளை, பிளாஸ்குகளை சுத்தம் செய்ய வேண்டுமானால் எலுமிச்சை தோலின் துகலுடன் வெந்நீரை அதனுள் சிறிது நேரம் ஊற்றி வைத்து விட்டு பின் சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும்.

 19. புதினா, வெள்ளைப் பூண்டு போன்றவற்றை சிறிய தொட்டிகளில் நட்டு வீட்டிற்குள் வளர்த்தால் எறும்புகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

 20. பூக்கள் வாடாமல் இருக்க கிள்ளிய பூக்களை நீரில் போட்டு வைத்திருப்பீர்கள் அல்லவா? அந்தத் தண்ணீரில் சிறிதளவு கரிப்பொடியைச் சேர்த்தால் பூக்கள் நீண்ட நேரம் பசுமையாக இருக்கும்.

Post a Comment

0 Comments