அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள்


 • காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு

 • எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது.

 • மது அருந்தல்.

 • புகைபிடித்தல்.

 • மென்குளிர்ப்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாக குடிப்பது.

 • ஸ்டீராயிடு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூபன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது.

 • உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது.

 • பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் மேலும் சுகாதாரமற்ற குடிநீர்.

 • கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobactcer pylori) என்னும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது.

 • மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதை தூண்டுகின்றன.

 • சிலவேளைகளில் பெரிய அறுவைச்சிகிச்சை, புறவழிக்காயங்கள், தீக்காயங்கள், கடுமையான கிருமித் தொற்றுகளும் இரைப்பையழற்சி உருவாகக் காரணங்களாகின்றன.

 • உடற்பருமனைக் குறைக்க மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சையின்போது நிகழும் சீரமைக்கப்பட்ட செரிமானக் குழாயாலும் இரைப்பையழற்சி உருவாக்கலாம்.

 • நாட்பட்ட காரணங்களாக பக்டீரியா, முதன்மையாக எலிக்கோபேக்டர் பைலோரி கிருமித் தொற்று, பித்தநீர் பின்னொழுக்கு (bile reflux), உளைச்சல் ஆகியவற்றைக் கூறலாம்.

 • சில தன்னெதிர்ப்பு பிறழ்வுகளும் இரைப்பையழற்சியை உருவாக்கலாம்.        

Post a Comment

0 Comments