வீட்டு பராமரிப்பு குறிப்புகள்  1. துரு கறைப் பட்டிருந்தால் எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து அந்த இடத்தில் தேய்த்து, பிறகு துவைத்தால் போய்விடும்.

  2. டப்பாக்களை சுத்தப்படுத்த சோப்பு கரைத்த நீரில் சிறிது மண்ணெண்ணெயை கலந்து கழுவினால் துருக் கறை போய் பளிச்சென்றாகி விடும்.

  3. சூடுபட்டுப் பழுப்பேறிய இடத்தில் மைதா மாவைப் பிசைந்து தடவி வெயிலில் காயப் போட்டால் பழுப்பு மறந்து விடும்.

  4. ரிப்பேராகி போன குடையின் கம்பிகளை முறுக்கு, வடை போன்ற பலகாரங்களைச் செய்யும்போது  அவற்றை வாணலியிலிருந்து எடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

  5. பூட்ஸ் பளபளப்பாக இருக்க இரவில் சோடா உப்பை தூவி விட்டு, மறுதினம் காலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பைத் துடைத்தால் பூட்ஸ் பளபளப்பாக இருக்கும்.

  6. சட்டைப் பித்தான்கள் அடிக்கடி அறுந்து போகாமல் இருக்க பித்தான்களை எலாஸ்டிக் நூலினால் தைக்கலாம். இல்லாவிட்டால் சாதாரண நூலில் பாலைத் தடவி உலர வைத்தப் பிறகு தைக்கலாம்.

  7. பட்டுத்துணிகள், டெரிகாட்டன், டெலிரின் போன்ற துணிகளை நிழலில் காய வைக்க வேண்டும். அப்படிக் காய வைத்தால் துணிகள் அதிக நாட்கள் வரை உழைக்கும்.

  8. துணிகளில் இருக்கும் சாயம் போகாமல் இருக்க துணிகளை நிழலில் காய வைக்க வேண்டும். அப்படிக் காய வைத்தால் துணிகள் அதிக நாட்கள் வரை உழைக்கும்.

  9. துணிகளில் இருக்கும் சாயம் போகாமலிருக்க துணிகளை கடுக்காய் ஊற வைத்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்தால் சாயம் போகாது.

  10. சன்னல் திரைகளைத் தைப்பதற்கு முன்பு, தைக்க பயன்படுத்தும் நீரை ஈரப்படுத்தி பிறகு தைத்தால் திரையின் பின்னால் சுருக்கம் விழாது.

Post a Comment

0 Comments