பேன், பொடுகை அழிக்கும் துளசிச் செடி • துளசி  இலைகளை நிழலில் உலர்த்தி மாவாக்கி மூக்கில் நுகர ஆஸ்மா சைனஸ் தொல்லை தீரும்.

 • துளசி இலை அவித்த நீரில் தேன் கலந்து குடிக்க காய்ச்சல் குறையும். 

 • துளசிச் சாறும் , தேனும் இருமலை நிறுத்திச் சளியை வெட்டும்.

 • தேள், பாம்பு கடித்தால் துளசியிலைச் சாற்றைக் குடிக்கக் கொடுத்து, அதன் மேலும் பூச விஷம் நீங்கும்.

 • துளசியிலைச் சாற்றைக் தலையில் பிரட்டிக் கழுவ சொடுகு, பேன் குறையும்.

 • துளசிச் சாற்றில் இளநீர் கலந்து பருக அலர்ஜி சரியாகும். தோல் நோய்களுக்குத்  துளசி நல்ல மருந்து.

 • துளசி இலையைத் தலையணை மேல் பரப்பிப் படுத்தாலும் பேன் போகும். துளசியை வாயில் போட்டு மென்று விழுங்க தொண்டைக் கரகரப்பு, வாய் நாற்றம் நீங்கும். கரும்துளசி சாப்பிட கபம் கட்டுப்படும். 
   
 • துளசி இலையைத் தேனீர் போலத் தயாரித்துப் பருக அலேயிக் நீங்கும். 4 கரண்டி துளசிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட இரத்த விருத்தி உண்டாகும்.

 • திப்பிலி, தேன், துளசிச்சாறு சேர்த்துச் சாப்பிட எலி, நாய்க்கடி விஷம் குறையும். 

 • துளசியை குடிக்கும் நீர்ப்பாத்திரத்தில் போட்டுக் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். துளசிச் சாற்றில் சந்தனம் கலந்து பூச முகப்பரு போகும்.


Post a Comment

0 Comments