இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்கீரை  • முருங்கைக் கீரையில் நிறைய இரும்புச் சத்தும் தாதுப்புகளுமுண்டு. முருங்கை இலை சாப்பிட்டால் கண் பார்வை வலுவடைவதுடன், நரம்புத் தளர்ச்சி நீங்கி வயிற்றில் உள்ள வேண்டாத அமிலத்தன்மை குறைவதுடன் முடியும் வளரும்.

  • முருங்கைப் பட்டையை அவித்த நீரால் வாய் கொப்பளிக்க வாய்த் துர்நாற்றம் போகும். பட்டையும், கடுகையும் அரைத்து சுடு நீரில் கலந்து மூட்டு வலிக்குப் போடலாம். 

  • முருங்கை இலையும், உப்பும் சேர்த்து அரைத்த சாற்றை இடுப்பு பிடிப்புக்குப் பூசலாம். இதன் கொழுந்துச்சாறும், சுண்ணாம்பும் கலந்து தொண்டையில் தடவ அரிப்புத் தீரும்.

  • மஞ்சள் காமாளை, நுரையீரல் சம்பந்தமான நோய்க்கு முருங்கை இலைச்சாறும், பால், தேன், கலந்து குடிக்க சுகம் வரும், நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

  • முருங்கை மரப்பிசினை தூள் செய்து 5மில்லிகிராம் பாலில் கலந்து தினமும் காலையில் குடிக்க நீரிழிவு, நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

  • முருங்கைக் காயில் தைரோயிட் சுரப்பிகளைச் சீர்செய்யக் கூடிய வேதிப்பொருள் உண்டு. பூவை பாலில் போட்டுக் காய்ச்சி இரவில் குடிக்க நல்ல தூக்கம் வரும்.       

Post a Comment

0 Comments