மாதவிடாய் வயிற்று வலியை தீர்க்கும் வேம்பு  • வேப்பம் எண்ணையையும், ஆடுதின்னாப் பாலை இலைச்சாற்றையும்  சம அளவாகக் கலந்து ஆறாத புண், பித்த வெடிப்பு, தோல் சம்பந்தமான சொறி தடிப்புகளுக்குப் பூசலாம்.

  • வேப்பம் பருப்பை பொடி செய்து நாட்பட்ட புழு (சலரோக) உள்ள புண்களில் தூவ புழுக் கொட்டி விடும். பருப்பை தணலில் போட்டுச் சுவாசிக்க பீனிச நீர் வடிதல்  நிற்கும்.

  • நிழலில் உலர்த்திய வேப்பம் பூவுடன், வெல்லம் சேர்த்து அல்லது ரசம் வைத்துச் சாப்பிட குடல்புண், வாய்வுத் தொல்லை தீரும்.

  • மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலிக்கு வேப்பங் கொழுந்தை அரைத்து கொட்டைப்பாக்களவு எடுத்து கடலை அளவு உள்ளி சேர்த்து சாப்பிட சுகமாகும்.வேப்பங் கள்ளை 30 மில்லி சாப்பிட உடல் திடகாத்திரமாகி காய்ச்சல் வருவதைத் தடுக்கும்.

  • மலை வேப்பம் பட்டை அவித்துக் குடிக்க நீரிழிவு குணமடையும். இப்பட்டையுடன் நாவல் கொட்டையுடன் சேர்த்து சூரணம் செய்து 1 சிட்டிகை சுடுநீருடன் பருக நரம்புத் தளர்ச்சி தீரும்.

Post a Comment

0 Comments