அல்சர் என்பது என்ன ?  • தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக பெப்டிக் 'அல்சர்'(peptic ulcer) என்கிறோம்.

  • இரைப்பையில் புண் ஏற்பட்டால் 'கேஸ்ட்டிக்' (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்' (Duodenal ulcer) என்றும் அழைக்கின்றோம்.

  • இரைப்பையில் உணவு செரிப்பதற்காக சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்னும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை இரைப்பை அழற்சி(Gastritis) என்கிறோம்.   
      
  • பொதுவாக சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர்.

  • சாப்பிட்டதும் வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர்.

  • இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால் நாளடைவில் இது இரைப்பை புண்ணாக மாறிவிடும்.

  • கவனிக்கத் தவறினால் அல்லது அல்டசியப்படுத்தினால் நாளடைவில் இரைப்பைப் புண்ணாக/ கட்டிகளாக இரத்தப் போக்காக மாறி சத்திரசிகிச்சை வரை செல்ல வாய்ப்புண்டு.

Post a Comment

0 Comments