எலும்புகளை பாதுகாக்க உண்ணவேண்டிய உணவுகள்

Foods to Protect the Bones

0
1173
எலும்புகளை பாதுகாக்க உண்ணவேண்டிய உணவுகள்

40 வயதிற்கு மேல் இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளிட்ட எலும்பு தொடர்பான பிரச்சினைகளை அநேகமானோர் சந்திக்கிறார்கள்.

உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாகவே 80 சதவிகிதம் குறைத்துவிடலாம்.

உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்னென்ன உணவுகளை எடுக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

பால்

பாலில் புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் K12 ஆகியவை நிறைந்துள்ளன. தினசரி பால் குடித்தால் பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துக்கு பின்பு மிகவும் நல்லது.

சீஸ் 

சீஸில் சத்து தரும் பாக்றிரியாவான புரோபையோட்டிக் உள்ளது. இந்த வகை பக்ரீரியா மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும்.

கீரை வகைகள் 

கீரை வகைகளில் எலும்பை பலப்படுத்தும் கால்சியம், தாதுக்கள், வைட்டமின் K, வைட்டமின் C நிறைந்துள்ளன.

எள்ளு 

எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஆகிய சத்த்துகள் நிறைந்துள்ளன. எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை இணைக்கும் பணியை எள்ளிலுள்ள தாமிரம் செய்கிறது.

முட்டை 

முட்டையிலுள்ள வைட்டமின் D மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

மீன் 

மத்தி மீன் வகை வைட்டமின் D நிறைந்தது. இது எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சப்படும் அளவை அதிகப்படுத்தக்கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here