கல்லீரலைப் பலப்படுத்தும் எலுமிச்சை

Lemon strengthens the liver

0
478
கல்லீரலைப் பலப்படுத்த

உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்


எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.

இதிலுள்ள அதிகமான வைட்டமின் ‘சி’ சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.

வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன.

பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.

பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.

இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும்.

மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.

தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here