துளசியின் மருத்துவ குணங்கள்

Tulsi's medicinal properties

0
457

துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா?

ஏதோ சில காரணங்களால் துளசி மாடமும் துளசி தீர்த்தமும் இந்து மதத்தை சார்ந்தது போல அனுமானம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது மதத்தை தாண்டிய மாபெரும் மருத்துவம். துளசி மடத்தை தினமும் சுற்றி வருதல், தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.

ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும். இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் உரைத்த அனைத்திற்கும் பின்னணியில் மருத்துவம் இருக்க தான் செய்கிறது…

  • துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்பு கோளாறு, ஞாபசக்தி இன்மை, ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இல்லை சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தே.கரண்டி அருந்தலாம்.சளி , இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தே.கரண்டி இந்த துளசி கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆண்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.
  • இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல்,போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்.
  • உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர் விட்டு அரைத்து அரைத்து பூசி வந்தால் எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
  • இலைகளை பிட்டவியலாய் அவித்து பிழிந்து சாறு 5மி.லி காலை,மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும். தாய்ப்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை, மாலை இரண்டு துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
  • மழை காலத்தில் துளசி இலையை தேநீர் போல காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுபவர்கள் துளசி இலை கஷாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சை சாறு  கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டு குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
  • துளசி இலையை இடித்து பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டு காயங்களுக்கு துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலை கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டை சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
  • துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாக செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களில் இருந்து காக்கிறது.
  • எளிமையான கருத்தடை சாதனமாகக் கொள்ள ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண்,பெண் இருவரும் துளசியை சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்கு பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்  

  1. உண்ட விஷத்தை முறிக்க
  2. ஜன்னிவாத ஜீரம் குணமாக
  3. விஷஜீரம் குணமாக
  4. வயிற்றுபோக்குடன் இரத்தம் போவது நிற்க
  5. காது குத்து வலி குணமாக
  6. காது வலி குணமாக
  7. தலைச்சுற்று குணமாக
  8. பிரசவ வலி குறைய
  9. அம்மை அதிகரிக்காதிருக்க
  10. சிறுநீர் துவார வலி குணமாக
  11. வண்டுகடி குணமாக
  12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக
  13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க
  14. தோல் சம்மந்தமான நோய் குணமாக
  15. மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற
  16. அஜீரணம் குணமாக
  17. கெட்டரத்தம் சுத்தமாக
  18. குஷ்ட நோய் குணமாக
  19. குளிர் காய்ச்சல் குணமாக
  20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here