கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

kaluthil ulla karumaiyai nekkuvatharku iyarkai vaithiyam. To eliminate blackness in the neck.

0
463
கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு 

உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும்

சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருக்கும். அதற்கு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

கழுத்தில் உள்ள கருமையை போக்கும் பேஸ்ட் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா : 2 கரண்டி
  • ஓட்ஸ் தூள் : 2 கரண்டி
  • பால் : தேவையான அளவு 
  • கடலைமா : 2 கரண்டி

செய்முறை 

கோதுமை மா உடம்பில் உள்ள அழுக்கை நீக்கும் தன்மை கொண்டது, ஓட்ஸ் கழுத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். கோதுமை மா, கடலைமா, ஓட்ஸ் மூன்றையும் ஒன்றாக கலந்து பின் தேவையான அளவு பால் கலந்து ஒன்றாக கலக்க வேண்டும். இப்போது கருமையை போக்கக்கூடிய பாட்டி வைத்திய பேஸ்ட் தயார்.

இந்த பேஸ்ட் ஐ வாரத்தில் 3 நாட்கள் கழுத்தில் கருமையாக உள்ள பகுதிக்கு பூசி மசாஜ் செய்ய வேண்டும். பின் 20 நிமிடங்கள் காயவைத்து அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர 1 மாதத்தில் நல்ல பயன் கிடைக்கும்.

 

எலுமிச்சை சாறு

எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

பேக்கிங் சோடா

4-5 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1-2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் வெளியேற்றப்படும்.

சந்தனப் பொடி

இரவில் படுக்கும் முன், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

தக்காளி

தக்காளியை சாறு எடுத்து, அதனை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைந்துவிடும்


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here