ஆண்மைக் குறைவு என்றால் என்ன?

What is male impotence?

0
207
ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
  1. ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
  2. ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?
  3. ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்?
  4. ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?
  5. ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
  6. ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?
  7. மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்
ஆண்மைக் குறைவு என்றால் என்ன?

இன்றைய நாகரீக உலகில் “பாலியல் உறவுகளை” பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. இல்லற வாழ்க்கையை இன்பமாய் அமைக்க தாம்பத்ய உறவும் மிக அவசியம்.

இன்று ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான். ஏனென்றால் குழந்தையில்லாத ஒரு ஆணை இவ்வுலகம் ஆண்மையில்லாதவன் என்றே கூறுகிறது.

ஆனால் பழங்காலத்தில் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும், அத்தனை பேரையும் இல்லற உறவில் திருப்பதி அடையும் அளவிற்கு அவனிடம் உடல் வலிமை யாகவும், அயரா உழைப்பும், ஊக்கமான உணவு பழக்கங்களும் இருந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன.

குழந்தையில்லாத அனைவரும் “ஆண் மையற்றவர்கள்” என்று கூறுவது மிகப் பெரும் தவறு. இனி ஆண்மைக் குறைவு பற்றி விரிவாக காணலாம்.

ஒரு ஆண் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பொழுது தன் குறியில் விரைவில் ஏற்படும் விறைப்பு தளர்ச்சியினாலோ (அல்லது) விறைப்பு ஏற்படுவதில் அதிக நேரமானாலோ அல்லது விறைப்பே ஏற்படாமல் அந்த செய்கையை முழுமையாக செய்ய முடியாமல் போவதையே “ஆண்மைக் குறைவு ” என்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here